ஈகோவை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும்- கோலிக்கு முன்னாள் வீரர் அறிவுரை..!

விராட் கோலி இந்த இங்கிலாந்து ஆடுகளத்தில் உங்கள் ஈகோவை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மணீந்தர் சிங் கூறியிருக்கிறார்.

கோலியின் தற்போதைய மோசமான நிலை குறித்து மணீந்தர் சிங் ESPNCricinfo இடம்  இந்த கருத்தை கூறினார்.

விராட் கோலி வழக்கமாக ஆதிக்கம் செலுத்த முயற்சித்தால், அப்படி பேட் செய்யக்கூடிய ஆடுகளங்கள் இங்கிலாந்தில் இல்லை ,முந்தைய 2018 சுற்றுப்பயணத்தில் அவர் 593 ரன்கள் எடுத்ததைப் போல அவர் பிட்சில் சிறிது நேரம் செலவிட வேண்டும்.

பந்தின் வேகத்தை அறிந்து, பந்து எவ்வளவு சீமிங் செய்கிறது என்பதை அறிந்தவுடன், நீங்கள் உங்கள் ஷாட்களை விளையாடலாம்.

“இவை தட்டையான இந்திய ஆடுகளங்கள் அல்ல, அங்கு நீங்கள் உங்கள் காலை முன்னோக்கி வைத்து ஆடத்தொடங்கலாம்.

கோஹ்லி இன்னும் நிறைய பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் ஈகோவை உங்கள் சட்டைப் பையில் வைத்திருங்கள், என்று  மணீந்தர் சிங்  மேலும் கூறினார்.

விராட் கோலி தனது கொடூரமான 2014 சுற்றுப்பயணத்தில் செய்த அதே தொழில்நுட்ப மற்றும் மன தவறுகளைச் (Technical & Mental )செய்கிறார்

அவர் உடலை விட்டு விளையாடுகிறார். நீங்கள் வழக்கமான கிரிக்கெட்டை விளையாடவில்லை என்றால் இதுதான் உங்களுக்கு நடக்கும். 2014 இல் கோலி செய்ததைப் போலவே அவர் வெளியேறினார், அப்போது (2014) அவர் 10 இன்னிங்ஸில் 138 ரன்கள் எடுத்தார்.

அதே மோசமான நிலமை திரும்பி வரத் தொடங்குகின்றன என்று நான் நினைக்கிறேன் – நான் தவறான வரிசையில் விளையாடுகிறேனா? நான் இந்த பந்துகளை விட்டுவிட வேண்டுமா? என கோலி சிந்திக்க வேண்டும்.

ராகுல் ,ரோகித் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்துகளை விட்டுச் சென்றனர். அதேபோல் கோலியும் செய்ய வேண்டும்.

அவர்கள் தவறான பந்துக்கு விளையாட விரும்பினர்  அதற்கான விலையை செலுத்தினர். விராட் கோலி தற்போது மிக மோசமான நிலையை சந்திக்கிறார், என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மணீந்தர் சிங் மேலும் வலியுறுத்தினார்.