உடல்தகுதி சோதனையில் தவறிய இலங்கையின் 2 வீரர்கள் -விபரம் வெளியானது..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான இருவர் உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பு தெரிவிக்கின்றது.

முன்னணி வீரர்களான தனஞ்சய டீ சில்வா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரே தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களால் பங்களாதேஷ் அணியுடனான போட்டிகளில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது, அதேநேரம் நாளை இடம்பெறவுள்ள உடல்தகுதி சோதனையிலும் தேற தவறும் பட்சத்தில் அவர்களால் இங்கிலாந்து அணியுடனான போட்டிகளிலும் பங்கேற்க முடியாது போகும் என தெரியவருகின்றது.

தனஞ்சய டீ சில்வா, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பு அண்மையில் தயாரித்துள்ள ஒப்பந்த பட்டியலில் முதல்தெரிவு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Previous articleநாங்கள் யாரை, எங்கே வைத்து வேண்டுமானாலும் வீழ்த்துவோம்-புஜாரா கெத்து பேட்டி…! (புள்ளி விபரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?
Next articleபங்களாதேஷில் குசல் பெரேராவின் அணியை தோற்கடித்தது குசல் மெண்டிஸ் அணி..! (படங்கள் இணைப்பு)