உபாதையடைந்த தஹானி , ரிஸ்வான் ஆகியோரது தற்போதைய நிலை என்ன -பாகிஸ்தான் தரப்பு தகவல்..!

பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஷாநவாஸ் தஹானியின் காயம் மற்றும் முகமது ரிஸ்வானின் MRI அறிக்கை குறித்த தகவலை வழங்கியுள்ளது.

24 வயதான தஹானி வெள்ளிக்கிழமை ஷார்ஜாவில் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது  காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் அவர் ஆடவில்லை.

விவரங்களின்படி, வேகப்பந்து வீச்சாளர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார் மற்றும் மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என செய்தி வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்தபோது ரிஸ்வான் தனது வலது காலில் உபாதையடைந்து சிரமத்திற்கு ஆளானதால், இன்று முன்னதாக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது.

காயம் இருந்தபோதிலும் வீரர் தொடர்ந்து 71 ரன்கள் எடுத்தார் என்பதால் MRI முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டது, அவரது ஸ்கேன் நாளை அவதானிக்கப்பட்டு அதன் பிறகு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தற்போது அவர் நலமாக உள்ளார்்எனவும் தெரிநவருகிறது.

பாகிஸ்தான் அடுத்தபோட்டியில் ஆப்கானிஸ்தானை செப்டம்பர் 7 ஆம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?