உலகக்கிண்ணத்தில் நான்காவது வீரருக்கு உபாதை- இன்னுமொரு மேற்கிந்திய தீவுகளின் வீரர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்…!
T20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சில அணிகள் காயத்தால் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
இந்த நிலையில் T20 உலகக்கிண்ணத்தில் காயம் காரணமாக 4 வது வீர்ர் ணியில் இருந்து நீக்கப்பட்ட மேலதிகமாக ஒருவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .
ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து நீக்கப்பட்ட பவியன் அலன் க்கு பதிலாக அஹீ்ல் ஹொசைன் கொண்டு வரப்பட்டார், பின்னர் நியூசிலாந்தில் அணியிலிருந்து பேரகுசன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அடம் மில்ன் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே மாதிரி வங்கதேசத்தின் சைபுதீன் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருபேல் ஹொசைன் அணிக்குள் கொண்டுவரப்பட்டார் .
இப்போது நான்காவது உபாதை காரணமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெக்னிக்கல் கமிட்டி இதற்கு அனுமதி வழங்கி இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேற்கிந்திய தீவுகளின் அபேட் மக்கேய் எனும் பந்து வீச்சாளரும் உபாதை காரணமாக வெளியேற்றப்பட, இவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் அணிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் உலகக்கிண்ணத்தில் உபாதையால் இரண்டாவது மாற்றமாகவும், ஒட்டுமொத்தமான நான்காவது காயம் காரணமான மாற்றமாகவும் இது அமைந்துள்ளது.