உலகக் கிண்ணத்துக்கான அணியை அறிவித்தது ஆப்கானிஸ்தான்- உடனடியாக விலகிக் கொள்ள தீர்மானத்த ரஷீத கான்- என்ன நடக்கிறது ?
T20 உலகக்கிண்ணப் போட்டிகள் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளன.
இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புக்குரியவையாக இருக்கும் நிலையில், அதிகமான அணிகள் உலகக் கிண்ணத்துக்கான அணிகளை அறிவித்திருக்கின்றன.
ஒரு சில அணிகளே இது வரைக்கும் அணிகளை அறிவிக்காத நிலையில், சற்று முன்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய அணி விவரத்தை அறிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அறிவித்திருக்கும் இந்த அணியின் தலைவராக ரஷீத கான் பெயரிடப்பட்டார், ஆனாலும்கூட அணி அறிவிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக ரஷீத் கான் தெரிவித்திருக்கின்றமை எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தன் எண்ணங்களும் விருப்பங்களும் பிரதிபலிக்கப்படாமல் அணி அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனால் தான் பதவி விலகிக் கொள்வதாக ரஷீத கான் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிக் கொண்டதன்் பின்னர் அங்கு அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது, இந்த நிலையில் ரஷீத் கான் பதவி விலகிக் கொண்டிருக்கின்றமை ஆப்கானிஸ்தானை இன்னும் பேசுபொருளாக்கியிருக்கிறது .
அறிவிக்கப்பட்டிருக்கின்ற உலக கிண்ண ஆப்கானிஸ்தான் அணி விபரம்.