உலகக் கிண்ணத்துக்கான இந்தியாவின் T20 அணி அறிவிப்பு- ஆச்சரியம் தரும் மாற்றங்கள் .!
சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தும் உலக டுவென்டி டுவென்டி தொடர் வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கான இந்திய கிரிக்கெட் அணியின் விபரம் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது .விராட் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட அணி விவரம் அறிவிக்கப்பட்டது.
அணியில் 2 தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வொசிங்டன் சுந்தருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு பதிலாக யாரை கொண்டு வருவது என்று என்ற நீண்டநேர விவாதத்திற்குப் பின்னர் இந்தியாவின் தேர்வு குழுவினர் ரவிச்சந்திரன் அஸ்வினை அணிக்கு தேர்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட அணையில் இருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த அஸ்வின், 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
அதுவும் உலக டுவென்டி டுவென்டி தொடர் எனப்படும் மிக முக்கியமான ஒரு தொடருக்கு அஸ்வினுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
அணி – விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (VC), கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
அணியில் காத்திருப்பு வீரர்கள் -(Reserve players ) ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.