உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு _முக்கிய இருவர் நீக்கம்..!
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள மகளிருக்கான உலக கிண்ண போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய மகளிர் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மித்தாலி ராஜ் தலைவியாகவும், ஹர்மான் பிரீத் கவுர் உதவி தலைவியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்திய மகளிர் அணியில் நீண்ட காலமாக இடம் பிடித்து வந்த ஜெமி ரொட்ரிக்ஸ்,ஷீக்கா பாண்டே ஆகிய வீராங்கனைகள் அணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் வலுவான ஒரு தரமான அணியாக மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகளிர் உலகக் கிண்ணம் மற்றும் அடுத்து வரவுள்ள நியூசிலாந்து தொடர் ஆகியவற்றை இலக்குவைத்தே இந்திய மகளிர் அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணி விபரம்
மிதாலி ராஜ் (சி), ஹர்மன்ப்ரீத் கவுர் (விசி), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா, தீப்தி, ரிச்சா கோஷ் (wk), சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், தனியா பாட்டியா (wk), ராஜேஸ்வரி, பூனம் யாதவ்.