ஐ.சி.சி. ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் முதலாவது வெற்றியைப் பெறும் குறிக்கோளுடன் ஷார்ஜா விளையாட்டரங்கில் மேற்கிந்தியத் தீவுகளும் பங்களாதேஷும் இன்று (29) பிற்பகல் 3.30 மணிக்கு மோதவுள்ளன.
குழு 1 க்கான சுப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து, தென் ஆபிரிக்க அணிகளிடம் மேற்கிந்தியத் தீவுகளும் இலங்கை, இங்கிலாந்து அணிகளிடம் பங்களாதேஷும் தோல்விகளைத் தழுவியிருந்தன.
எனினும் அணிகள் நிலையில் நிகர ஓட்ட அடிப்படையில் பங்களாதேஷ் 4 ஆவது இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் 5 ஆவது இடத்திலும் உள்ளன.
இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிட்டாமல் போகும்.
இந்த இரண்டு அணிகளும் 12 தடவைகள் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 6 – 5 என்ற ஆட்டக்கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலையில் இருக்கின்றது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 2 சந்தர்ப்பங்களில் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.
அணிகள் விபரம்:-
மேற்கிந்தியத் தீவுகள்: எவின் லூயிஸ், கிறிஸ் கேல், ரொஸ்டன் சேஸ், நிக்கலஸ் பூரண், கீரன் பொல்லார்ட் (தலைவர்), அண்ட்ரே ரசல், ஷிம்ரன் ஹெட்மியர், ட்வேன் ப்ராவே, ஹேடன் வோல்ஷ், ஹேடன் வொல்ஷ், அக்கில் ஹொசெய்ன் ரவி ராம்போல்.
பங்களாதேஷ்: மொஹம்மத் நய்ம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், முஷ்பிக்குர் ரஹிம, மஹ்முதுல்லாஹ் (தலைவர்), அபிப் ஹொசெய்ன், நூருள் ஹசன், மஹேதி ஹசன், நசும் அஹ்மத், தஸ்கின் அஹ்மத், முஸ்தாபிர் ரஹ்மான்.