உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி..!

டி20 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணி 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட அதேவேளை, இலங்கை மகளிர் அணி 10.1 ஓவர்களில் 95 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் கவீஷா தில்ஹாரி 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், இனோஷி பிரியதர்ஷனி 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சுகந்திகா குமாரி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இலங்கையின் பதிலில், சாமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை மகளிர் அணி இதுவரை கலந்து கொண்ட இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று A குழுவில் முதலிடத்தில் உள்ளது