ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட்டுவிடாதீர்கள்: உலகத் தலைவர்களுக்கு ரஷித் கான் உருக்கமான வேண்டுகோள்
பூமியில் மிகவும் ஆபத்தான, மோசமான இடமாக ஆப்கானிஸ்தான் மாறிவருவதை நினைத்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷித் கான் ட்விட்டரில் விடுத்து வேண்டுகோளில் கூறுகையில் “ அன்பார்ந்த உலகத் தலைவர்களே! என்னுடை தேசம் முழுமையான நிர்வாக சீர்கேட்டில், குழப்பத்தில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் நாள்தோறும் துப்பாக்கி குண்டுகளுக்கு மரணம் அடைகிறார்கள்.
எங்கள் மக்களின் வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புலம்பெயர்ந்துள்ளார்கள். எங்களை பெரும் குழப்பத்திலும், முழுமையான சீர்கேட்டிலும் கைவிட்டுவிடாதீர்கள்.
ஆப்கானிஸ்தான் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள், ஆப்கானிஸ்தானை அழிப்பதை நிறுத்துங்கள். எங்களுக்கு அமைதி தேவை” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ரஷித் கானின் இந்த உருக்கமான பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரஷித் கானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். இவரின் இந்த மனம் உருக வைக்கும் கோரிக்கைக்கு உலக தலைவர்கள் செவிசாய்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
#ABDH