உலகின் 2வது உயரமான மனிதன் மெஹர்சாட் உதவியோடு பரா ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கி படையெடுக்கும் ஈரான்..!

உலகின் இரண்டாவது உயரமான மனிதன் மோர்டெஸா மெஹர்சாட் உதவியோடு பரா ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கி படையெடுக்கும் ஈரான்..!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் உலகின் உயரமான இரண்டாவது மனிதனான ஈரானின் மோர்டெஸா மெஹர்சாட் உதவியோடு தொடர்ச்சியான இரண்டாவது பக்கத்தை நோக்கி காத்திருக்கிறது ஈரான் வலைப்பந்து அணி.

சீனா அணியுடனான போட்டியில்  (25-21, 25-22, 25-14) என மிக இலகுவாக வெற்றி பெற்றது.

அதற்கு உலகின் இரண்டாவது உயரமான மனிதன் என்ற உலக சாதனையை தன்வசம் வைத்திருக்கும் மோர்டெஸா மெஹர்சாட் எனப்படும் இந்த அணியில் இடம் பிடித்திருந்த வீரரே ஈரான் அணியின் வெற்றி பயணத்தின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் ஈரான் அணிக்கு பதக்கம் கிடைப்பதற்கு இவரே காரணமாக இருந்தார், இவர் 15 வயதாக இருந்தபோது துவிச்சக்கர வண்டியில் ஓடிக் கொண்டிருந்தபோது உபாதைக்கு உள்ளாகிி அங்கவீனமுற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது இடது கால், வலது காலை விட 6 அங்குலம் குறைவானதாக காணப்படுகிறது, இதனால் அங்கவீனமுற்றவர்ளுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

இவரது உதவியோடு பரா ஒலிம்பிக் போட்டிகளில் இம்முறையும் ஈரான் தங்கப்பதக்கத்தை சுவீகரிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மோர்டெஸா மெஹர்சாட், எட்டு அடி மற்றும் ஒரு அங்குலம் உயரமுடையவர். 2016 இல் ரியோவில் தனது நாட்டை தங்கம் வெல்ல உதவி செய்த பிறகு, பாராலிம்பிக்கில் மிக உயரமான போட்டியாளர் எனும் சாதனையும் படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது FB பக்கத்தை லைக் சைய்யுங்கள் ???

https://www.facebook.com/vilaiyaddu.lk/