1996 ம் ஆண்டு மார்ச் மாதம் 17 ம் திகதி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்.
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை மகிழ்வித்த நாள்.
அர்ஜுன ரணதுங்க 1996 ம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் வைத்து 6 வது ICC உலக கிண்ணத்தை தன் கைகளில் ஏந்தியபோது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கிபோகியின.
இலங்கை எனும் அடையாளம் இன்றிய ஓர் குட்டித்தீவிற்குள் இத்தனை கெட்டிக்காரரர்களா என்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வை இலங்கை கிரிக்கெட்டின் மீது பட்டது.
1996 ம் ஆண்டு மார்ச் 17 ம் திகத்திக்கு பின்னரே இலங்கை எனும் தேசம் உலக வரைபடத்தில் எங்கே உள்ளது என்பதையே அதிகாமானோர் அறிந்துகொள்ள முற்பட்டதும் இலங்கையின் உலக கிண்ண வெற்றிகளின் பின்னர் தான்.
சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனையோ திறமை வாய்ந்த உலக அணிகள் பங்கேற்ற உலக கிண்ணத்தில் எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து லாகூர் கடாபி மைதானத்தில் பாகிஸ்தான் பிரதமர் Benazir Bhutto கைகளில் இருந்து அர்ஜுனன் ரணதுங்க உலக கிண்ணத்தை ஏந்திய அந்த நாள், இப்போதும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களை ஆண்டுகொண்டிருக்கின்றது.
அந்த மனது மறக்காத மகத்தான இலங்கை கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனைக்கு இன்றோடு வயது 25 .
அதனை சிறப்பிக்கும் முகமாக சிறப்பு நிகழகுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டன. உலக கிண்ண அணியில் இடம்பெற்ற அர்ஜுன ரணதுங்க தலைமையிலான நாயகர்களுக்கு இன்று பிரதமர் நினைவு சின்னங்களை வழங்கி வைத்தார்.
வெற்றிக்கதாநாயகர்ளை வாழ்த்துவோம்.
புகைப்படங்கள் இணைப்பு.