உலக கிண்ணத்தை இலக்குவைத்து பலம் பொருந்திய அதிரடி வீரர்களை அணிக்குள் இணைத்தது மேற்கிந்திய தீவுகள்..!

உலக கிரிக்கெட் அரங்கில் இருபதுக்கு இருபது போட்டிகளின் அசகாய சூரர்களாக திகழும் மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறையும் T20 உலக கிண்ணத்தை இலக்கு வைத்து அவர்களது முதல்தெரிவு வீரர்களை அணிக்கு அழைத்திருக்கிறது.

கெயில், பொல்லார்ட் , பிராவோ,ரசல், சிம்மோன்ஸ் என்று T20 போட்டிகளுக்கென்றே பிறப்பெடுத்த இந்த அதிரடி நாயகர்கள் அனைவரும் அணிக்குள் வந்துள்ளனர்.

அணிக்கு பொல்லார்ட் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமபலம் பொருந்தியதாக இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்து வரவுள்ள தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ,அவுஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுடனும் இடம்பெறவுள்ள தொடருக்காகவே இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 15 T20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் விளையாடவுள்ளது.

ஆயினும் இந்த அணியில் சுனில் நரைன் இணைக்கப்படவில்லை என்பது முக்கியமானது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிரான் பொல்லார்ட் (தலைவர் ),
நிக்கோலஸ் பூரான் (wk),
பாபியன் ஆலன்,
டிவையன் பிராவோ ,
ஷெல்டன் காட்ரல் ,
பிடல் எட்வர்ட்ஸ் ,
ஆண்ட்ரே பிளெட்சர் ,
கிறிஸ் கெயில் ,
சிம்ரோன் ஹெட்மயேர் ,
ஜேசன் ஹோல்டர் ,
அகில ஹூசெய்ன் ,
ஏவின் லீவிஸ்,
ஒபேட் மிக்கோய்,
ஆண்ட்ரே ரசல் ,
லேண்டில் சிம்மோன்ஸ் ,
ஓஷனே தாமஸ்,
ஹய்டேன் வால்ஷ் (ஜூனியர்)