உலக கிண்ண அணியோடு பயணிக்கப்போகிறார் வெங்கடேஷ் ஐயர்..?

உலக கிண்ண அணியோடு பயணிக்கப்போகிறார் வெங்கடேஷ் ஐயர்..?

அடுத்துவரவுள்ள ICC டுவெண்ட்டி டுவெண்ட்டி உலக கிண்ண போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியோடு இணைந்து பயணிக்கும் வாய்ப்பும் IPL போட்டிகளில் கலக்கும் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு கிட்டியுள்ளது.

இந்தியாவின் முன்னணி சகலதுறை வீரரான ஹார்டிக் பாண்டியா போர்ம் அவுட் மற்றும் பிட்னஸ் சிக்கல்களால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பதிலாக உலக கிண்ண அணியோடு சேர்ந்து பயணிக்குமாறு வெங்கடேஷ் ஐயர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்ப வீரராக கலக்கி வரும் வெங்கடேஷ் ஐயர், ஒட்டுமொத்தமான ரசிகர்களது கவனத்தை மட்டுமல்லாது தேர்வாளர்களது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இவரோடு RCB அணியின் ஹர்ஷல் பட்டேல், கொல்கொத்தா அணியின் சிவம் மாவி, டெல்லி அணியின் அவேஷ் கான் ஆகியோரும் இந்தியாவின் பயிற்சி வீரர்களாக அணியில் இணைக்கப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.