உலக கிரிக்கட்டை ஆள மீண்டுமொரு டீ வில்லியேர்ஸ் தயார் – U19 world cup ❤️
நேற்று இங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா இடையே நடந்த காலிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோல்வியைத் தழுவி இருக்கிறது.
முதலில் bat செய்த தென்ஆப்பிரிகாவுக்கு வழக்கம்போல் ஜூனியர் Abd Dewald Bravis மட்டுமே 88 பந்துகளில் 97 ரன்கள் அடிக்க மற்றவர்களும் வழக்கம்போல் நடையைக் கட்ட 209 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்த முறை junior Abdக்கு அணியின் கேப்டனான junior du-plessis ஹீர்டன் ஒத்துழைப்பு தரவில்லை.
பின்பு களமிறங்கிய இங்கிலாந்தின் ஓபனர் Jacob Bethell தென்ஆப்பிரிக்க அணியின் மேல் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை 88 ரன்களை வெறும் 42 பந்தில் அடித்து ஆட்டத்தை பொசுக்கென்று முடித்துவிட்டார். இதில் 16 பவுண்டரி 2 சிக்ஸரென அடித்த 88 ரன்களில் 76 ரன்களை பவுண்டரி மூலம் மட்டுமே வெறித்தீர அடித்திருக்கிறார்.
Jacob Bethell ஆடும் பொழுது ஸ்டாரஸ்-ஸ்டோக்ஸின் கலவையாய் தெரிகிறார். பந்தை பிசிறடிக்காமல் gapல் செலுத்துகிறார். அதேவேளையில் தூக்கியடிக்கும் போது ஸ்டோக்ஸ் ஸ்டைலில் அடிக்கிறார். இவர் இடக்கை பேட்ஸ்மேன் என்பதோடு இடக்கை சுழற்பந்து வீச்சாளராகவும் இருப்பது இவரது கிரிக்கெட் எதிர்காலத்தைப் பிரகாசமாக்குகிறது.
இவருக்கு அடுத்து 47 ரன்கள் அடித்த William Luxtonனும் அதை 41 பந்துகளில் அடித்திருப்பதின் மூலம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு பலகீனம் தெரிகிறது.
கிரிக்கெட்டோடு பெரிய தொடர்பில்லாத ஆப்பிரிக்க கண்ட உகாண்டா அணியிடம் இந்திய அணி 405 ரன்கள் விளாச, தென்ஆப்பிரிக்காவோ 230+ரன்கள் அடிந்திருந்த பொழுதே தென்ஆப்பிரிக்காவின் பேட்டிங் பலகீனம் தெளிவாய் தெரிந்தது.
தென்ஆப்பிரிக்கா விளையாடிய எல்லாப் போட்டிகளிலும் அடித்தவர் Junior Abdதான். ஒரு ஆட்டத்தில் Junior du-plessis சதம் அடித்திருந்தாலும் அந்த ஆட்டத்திலும் Junior Abd அடித்த ரன்கள் 91.
எது எப்படியோ இந்த U19 உலகக்கோப்பையால் Dewalt Bravis என்ற குட்டி டிவிலியர்ஸ் கிடைத்திருக்கிறார். இவர் டிவிலியர்ஸ் போல் சில shotsகள் மட்டுமே ஆடுவதில்லை மொத்தமாய் அவரைப் போலவே ஆடுகிறார். அதுவும் சின்ன இன்னிங்ஸ் இல்லை பெரிய இன்னிங்ஸ்.
மிட்-ஆன் மிட்-ஆப் ல் பீல்டர்கள் வட்டத்திற்குள் இருக்கும் போது, சரியான நேரம் கொடுத்து நேராக அடிப்பதற்கு சிரமமான பந்தை நேராக பவுண்டரி தூக்கியடிக்கிறார். அடிப்பதற்கான slogல் விழும் பந்துகளை அனாசயமாக மிட்விக்கெட்டில் சிக்ஸராய் பறக்க விடுகிறார். ஆப்ஸைட் பீல்டர்களை உள்வட்டத்தில் வைக்கும்போது, லெக்ஸைட் நகர்ந்து இடம் ஏற்படுத்தி அற்புதமாக இன்ஸைட்-அவுட் ஆடுகிறார். முன்காலை தேவைக்குத் தகுந்தபடி நகர்த்தி இடம் ஏற்படுத்திக்கொண்டு மிட்விக்கெட்டில், ஸ்ட்ரெய்டில் இவர் அடிக்கும் சிக்ஸர்கள் அத்தனை எளிதாய் தெரிகிறது. Golf&Hockey டைப் shots. Abdயின் பாஸ்ட் பவுலிங் ஸ்வீப் மற்றும் ஸ்கூப் டைப் shotsயைத்தான் பார்க்க முடியவில்லை. மீதி ஆடும் வரை அத்தனையுமே Abd ஸ்டைல்தான்!
உறுதியாகச் சொல்கிறேன் இந்தப் பையன் இப்போது சர்வதேச கிரிக்கெட்டிற்கு தயாராக இருக்கிறான்!
#Richards