உலக கிரிக்கெட்டின் பாதுகாவலன் -புஜாரா

கிரிக்கெட்டில் Out of form.தவிக்கும் பாதுகாவலன் .புஜாரா

கிரிக்கெட்டில் இலகுவாக அடிக்கக்கூடிய பந்துகளைக்கூட அடிக்க முடியாமல் ஒரு துடுப்பாட்டவீரன் தடுமாறுவதை Out of form என அழைக்கிறது கிரிக்கெட் உலகம். இதற்குக்காரணம் Mental block என்கிறார்கள் முன்னைய வீரர்கள். அதாவது வீரன் ஒருவன் தனது திறமைமேல் தானே நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதே இந்நிலைக்குக் காரணம்.

புஜாரா தற்போது அப்படியொரு நிலையில்தான் இருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. அவரின் ஆட்டம் முன்னையயவீரர் ஒருவரைப்பற்றிய பழைய நினைவுகளைக் கிளறுகிறது,

ராகுல் ட்ராவிட் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் அவரும் தனது சர்வதேசக் கிரிக்கெட்டின் இறுதிநாட்களில் Out of form என்ற நிலைக்குள்ளாகி தடுமாறினார். அந்தநாட்களில் ஒருமுறை அவுஸ்திரேயாவில் அவர் மணிக்கணக்காகத் தடுத்தாடித் தடுமாறிக் கொண்டிருக்க அதனால் மற்றயவீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழக்கத்தொடங்கியது நினைவு வருகிறது.( ஆனால் அதிர்ஷ்டவசமாக விவிஎஸ் லஷ்மண் மதியம் 2 மணிக்குப் பின்னால் களமிறங்கி அவுஸ்திரேலியாவின் பிரட் லீ மக்ராவை எதிர்த்து அடித்தாடத் தொடங்கி ஸ்டம்பின் போது சென்சுரி அடித்து இந்தியாவைக் காப்பாற்றியது வேறுகதை )

கிரிக்கெட்டில் ஒருவர் out of form என்ற நிலைக்குள் தள்ளப்பட்டால் அல்லது அப்படி அவரே நினைத்துக்கொண்டால் அவரின் தன்னம்பிக்கையில் அந்த நினைப்பு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் இதன் காரணமாக அவர் தேவைக்கு அதிகமாக அதீத கவனத்துடன் ஆடத்தொடங்கி பெரும்பாலான பந்துகளை அடித்தாடுவதற்குப் பதில் தடுத்தாடத் தொடங்குவார் இதனால் இவருடன் ஆடுகளத்தில் நிற்கும் மற்றய வீரர் அணிக்காக அதிக ஓட்டங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார் அந்த நினைப்பு கொடுக்கும் பிரஷரால் எல்லாப் பந்துகளையும் அடித்து ஆடமுனைந்து அநியாயமாக ஆட்டமிழப்பார்.

புஜாராவின் தற்போதைய ஆட்டம் ராகுல் ட்ராவிட் பட்ட பாட்டை நினைவுபடுத்துகிறது, இந்தப்பதிவை நான் எழுதத் தொடங்கியபோது கோஃலியும் ஆட்டமிழந்து செல்கிறார், அவரின் ஆட்டமிழப்புக்கு ஒரேயடியாக புஜாராவைக் குற்றம் சொன்னால் அதைப்போல முட்டாள்தனமும் அறிவீனமும் இல்லை ஆனால் புஜாராவின் ஆட்டம் சிறிதளவேனும் கோலியின் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை.

சென்ற வருடம்வரை இந்திய அணியின் வெற்றிகள் பலவற்றுக்கு முக்கிய காரணமாக இருந்தது புஜாராவின் Solid ஆட்டம், அவுஸ்திரேலியாவுடனான் வெற்றிகளில் அவரின் பங்கு அளப்பரியது, ஆனால் அவரின் தற்போதைய நிலைமை இந்திய அணியின் தோலிவிகளுக்கு காரணமாகக்கூடும்.

கிரிக்கெட்டில் Out of form இனைப்பற்றி மத்தியூ ஹேய்டனிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறியது, ” அப்படியொன்று இல்லை அந்த எண்ணமே Rubbish ஊடகங்களே அதை உருவாக்குகின்றன ஆடுகளத்திற்குள் சென்றதும் Clear mind உடன் ஆடத்தொடங்கவேண்டும்”. புஜாரா மத்தியூ ஹேய்டனின் வார்த்தைகளை வேதவாக்காக எடுக்கவேண்டும்.

லோட்ஸ் மைதானத்தில்  புஜாராவின் நிதானமான துடுப்பாட்டம் இப்போது அவர் மீதான விமர்சனங்களை ஓரளவிற்கு குறைத்திருக்கிறது.

அவருடைய நிதானமான துடுப்பாட்டம் லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் வெற்றிகளுக்கு காரணமாகவும் இருக்கிறது.

ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக கிரிக்கட்டின் பாதுகாவலனாக புஜாரா தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும் புஜாரா அதிகமான பந்துகளை சந்தித்து எதிரில் இருக்கும் வீரருக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்துவாராக இருந்தால் புஜாரா உலக கிரிக்கட்டின் பாதுகாவலனாக தன்னையும் நிலை நிறுத்தலாம்.

#ABDH