உலக கிரிக்கெட் அரங்கில் தற்போதைய அபாயகரமான 4 பந்துவீச்சாளர்கள்- பட்டியல் படுத்தும் ஸ்டீவ் ஸ்மித்..!

உலக கிரிக்கெட் அரங்கில் தற்போதைய அபாயகரமான 4 பந்துவீச்சாளர்கள்- பட்டியல் படுத்தும் ஸ்டீவ் ஸ்மித்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான ஸ்டீவ் ஸ்மித் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

தற்போதைய உலக கிரிக்கெட் அரங்கில் அபாயகரமான வேகப்பந்துவீச்சாளர்கள் யார் என்னும் கேள்விக்கு பதிலளிக்கும்போது நால்வரின் பெயரை அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா ஆகியோரோடு அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆகியோரை ஸ்டீவ் ஸ்மித் உலகின் அபாயகரமான தற்போதய வேகப்பந்து வீச்சாளர்களாக குறிப்பிட்டுள்ளார்.

Q & A கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றின் போதே ஸ்டீவ் ஸ்மித் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.