உலக கோப்பையை தவறவிடுகிறார் இந்தியாவின் முன்னணி சகலதுறை வீரர் …!

ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலகக் கோப்பையை தவறவிடும் நிலமை உருவாகியுள்ளது,  அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கிற்கு எதிராக ஆசிய கோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய ஜடேஜா, தனது ஆல்ரவுண்ட் திறன்களுடன் அணிக்கு தேவையான சமநிலையை வழங்குகிறார், இப்போது அவர் இல்லாதது ரோஹித் சர்மா தலைமையிலான அணிக்கு பாரிய இழப்பு எனலாம்.

“ஜடேஜாவின் வலது முழங்காலில் காயம் மிகவும் தீவிரமானது” என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் PTI யிடம் தெரிவித்தார்.

“அவர் ஒரு பெரிய முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் மற்றும் காலவரையின்றி அணியில் செயல்படாமல் போகும் நிலை உள்ளது எனத்தெரிவித்தார். இதிலிருந்து குணமடைய ஆறு மாதங்கள் ஆகலாம்.

ஜடேஜாவின் முழங்கால் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதும், கடந்த ஒரு வருடத்தை உன்னிப்பாகப் பார்த்தால், அவர் தனது இடது கை சுழற்பந்து வீச்சுடன், அனைத்து வடிவங்களிலும் பேட்டிங் ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

எவ்வாறாயினும் ஜடேஜாவின் இழப்பு இந்தியாவுக்கு பலத்த பின்னடைவு என்பதை மறுக்கமுடியாது.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?