உலக கோப்பையை தவறவிடும் பிரேசிலின் இரு நட்சத்திரங்கள்…!

சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூனுக்கு எதிரான பிரேசிலின் மீதமுள்ள உலகக் கோப்பை குரூப் ஆட்டங்களில் நெய்மர் மற்றும் டானிலோ வெளியேறுவார்கள் என்று அணியின் மருத்துவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வியாழன் அன்று செர்பியாவுக்கு எதிரான 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற போட்டியில் காயம் அடைந்த பிரேசில் ஜோடியான நெய்மர் மற்றும் டானிலோ தங்கள் நாட்டின் மீதமுள்ள இரண்டு உலகக் கோப்பை குரூப் ஆட்டங்களைத் தவறவிடுவார்கள்.

நாக் அவுட் நிலைக்குத் தகுதி பெறுவதற்கான தகைமைக்காக காத்திருக்கிறார்கள் என்று அந்த அணிக்கு நெருக்கமான வட்டாரம் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

“வெள்ளிக்கிழமை மதியம் நெய்மர் மற்றும் டானிலோ எம்ஆர்ஐ பரிசோதனைக்கு சென்றனர், அவர்கள் இருவரின் கணுக்காலிலும் தசைநார் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“அவர்கள் அடுத்த ஆட்டத்தை நிச்சயமாகத் தவறவிடுவார்கள், நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம், ஏனெனில் அவர்கள் மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட முடியும்.” எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇