இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் குறித்த நேரத்தில் இன்னிங்ஸை முடிக்க முடியாததால், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் தென் ஆப்பிரிக்காவின் புள்ளியில் இருந்து ஒரு புள்ளியைக் குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது.
2023 ODI உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை இப்போது கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது.
இதுவரை 79 புள்ளிகளைப் பெற்றிருந்த தென்னாப்பிரிக்கா, தற்போது 78 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 8வது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் 88 புள்ளிகளுடனும், 10வது இடத்தில் உள்ள இலங்கை 77 புள்ளிகளுடனும், 11வது இடத்தில் உள்ள அயர்லாந்து 68 புள்ளிகளுடனும் உள்ளன.
சூப்பர் லீக்கில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது, இதன்படி நியூசிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் சூப்பர் லீக்கின் கீழ் தென்னாப்பிரிக்காவிற்கு மீதமுள்ள கடைசி தொடர் ஆகும். இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா 98 புள்ளிகளைப் பெறலாம். சுப்பர் லீக்கின் கீழ் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணிக்கு 3 சவாலான போட்டிகள் எஞ்சியுள்ளன.
நியூசிலாந்தில் நடக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால், இலங்கை அணி 107 புள்ளிகளைப் பெறலாம். அப்படியானால், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து இடையேயான தொடரில் முன்னிலை வகிக்கும் அணி புள்ளிப்பட்டியலில் அதிக இடத்தைப் பிடிக்கும்.
ஆனால் எஞ்சிய மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால் தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் நேரடியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாது, மேலும் இலங்கை நேரடியாக உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெறும்.
இலங்கை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ஒரு போட்டி மழையால் முடிவு இன்றி முடிவடைந்தாலும், புள்ளிப் பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் நுழைந்து உலகக் கோப்பைக்கு இலங்கை அணி தகுதி பெறலாம்.
எவ்வாறாயினும், இலங்கை ஒரு போட்டியில் கூட தோல்வியடைந்தால், மற்ற போட்டிகளின் முடிவுகள் தமக்கு சாதகமாக முடிவடையும் வரை இலங்கை காத்திருக்க வேண்டும்.
இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றால் இலங்கை அணி 97 போனஸ் புள்ளிகளை மாத்திரமே பெற முடியும் என்பதால் தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் இலங்கையை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.
நியூசிலாந்தில் இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால் இலங்கை அணி நேரடியாக உலகக்கிண்ணத்திற்கு தகுதிபெற முடியாது. சூப்பர் லீக் 13 நாடுகளை உள்ளடக்கியது, மேலும் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறாத 5 நாடுகள் தகுதிப் போட்டியில் விளையாட வேண்டும்.
ஐசிசியில் முழு உறுப்பினர்களாக இல்லாத மற்ற 5 நாடுகளும் அந்த தகுதிப் போட்டியில் விளையாடும், அந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்்என்பதும் கவனிக்கத்தக்கது.
எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇