IPLல் பேட்டிங்கில் ஓபன் பண்ணும் மீடியம்-பாஸ்ட் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ், இந்திய அணிக்கு பினிஷர்.
இந்திய அணிக்கு பினிஷர் ரோல் செய்யும் மீடியம்-பாஸ்ட் ஆல்ரவுண்டர் ஹர்திக், IPLல் மிடில் ஆர்டர்.
தேசிய அணியில் இடத்திற்காக இவர்களுக்குள் மறைமுகமாக ஒரு போட்டி, நடப்பு IPL தொடரில் நேருக்குநேர் சந்திக்காத போட்டிகளிலும் நடக்கும்.
பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க முன்கூட்டியே இறங்குவது, பவுலிங்கில், பிட்னசில் நிரூபிக்க நான்கு ஓவர்கள் வீசுவதுதென்று ஹர்திக் போட்டிக்கான சவாலை முதல் போட்டியிலேயே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
வெங்கடேஷை பொறுத்தவரை அவர் தன்னை பேட்டிங்கில்தான் நிரூபிக்க முடியும். ஜடேஜா-சர்துல்-தீபக் மூவரும் பேட்டிங்கிலும் பங்களிப்பது, வெங்கடேஷ் பவுலிங்கில் தன் பங்களிப்பின் பயனை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கவில்லை!
நடப்பு IPL தொடரில் மொகம்மத் ஷமியின் செயல்பாடுகளைப் பொறுத்தே T20 உலகக்கோப்பை அணியில் இடம் என்ற பேச்சிருக்கும் போது அவரின் நேற்றைய பந்துவீச்சு ஒரு புதிய சவாலை தேர்வாளர்களுக்கு அளித்திருக்கிறது. ஒருபுறத்தில் சிராஜ்-ஹர்சல்-ஆவேஷ் சறுக்குவதுமே!
இதெல்லாம் ஒருபுறம் என்றால் ஒதுக்கப்பட்ட வீரர்கள் திரும்பி எழுந்து வந்து வெறியோடு தங்களை நிரூபிப்பது. இந்த விதத்தில் உமேஷ் யாதவ் ஒருபுறம் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். இதே மனநிலையோடு ரகானேவும் தன் அருமையான பேட்டிங் டைமிங்கை மீட்டுக்கொண்டுவந்து மிரட்டுகிறார்!
ஆட்ட சூழல், ஆட்டத்திற்கான வியூகங்களைச் செயல்படுத்துவதை தாண்டி, வீரர்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக எதற்காகவாவது யாருக்காகவாவது தங்களை நிரூபிக்கும் பொருட்டு ஆட்டத்திற்குள் ஒரு ஆட்டம் ஆடுவார்கள். அதுதான் ஆட்டத்தை விட சுவாரசியமானது. அதுதான் ஆட்டத்தை இன்னுமின்னும் சுவாரசியப்படுத்தும்!
சிலர் அணியில் தங்களின் இடத்தை உறுதி செய்வதற்காக அணியின் நலனைப்பற்றி கவலையில்லாமல் சுயநலமாய் விளையாடுவார்கள். இது அது கிடையாது. இது தங்களை அதிரடியாய் நிரூபிப்பதின் மூலம் ஆடும் அணியின் வெற்றிக்குப் பெரிய உதவியாய் இருப்பது!
#Richards