உலக சாதனையாளர்கள் வரிசையில் இடம்பிடித்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி ..!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி அண்மைக்காலமாக கிரிக்கெட் களத்தில் சோபிக்க தவறினாலும் கூட , அவருக்கான மதிப்பு மரியாதை என்பது இன்னும் குறைந்தபாடில்லை.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் முதன்மைத் தளமான இன்ஸ்டாகிராம் தளத்தில் கோலி ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
150 மில்லியன் பயனர்கள் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்கிறார்கள்்.
விளையாட்டு உலகிலேயே 150க்கும் மேற்பட்ட பயனர்கள் பின்தொடர்ந்த நான்காவது விளையாட்டு வீரராகவும், முதலாவது இந்தியராகவும், முதலாவது ஆசிரிய நாட்டவர் என்பது மாத்திரமல்லாமல் முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் கோலிக்கு கிடைத்திருக்கிறது.
ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் ஆகிய கால்பந்து நட்சத்திரங்களை தொடர்ந்து முதல் கிரிக்கெட் நட்சத்திரமாக கோலி இங்கே சாதனை படைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
⚽ கிறிஸ்டியானோ ரொனால்டோ – 337 மில்லியன்
⚽ லியோனல் மெஸ்ஸி – 260 மில்லியன்
⚽ நெய்மர் – 160 மில்லியன்
? கோலி -150 மில்லியன்
இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கும் போது கோஹ்லி இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் பிரபலமாகவும் உள்ளார்.
ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுக்கு 5 கோடி ரூபாய் வசூலிக்கிறார். கோஹ்லி இப்போது 150 மில்லியன் மதிப்பை எட்டியுள்ள நிலையில், ஒரு பதிவுக்கான விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரொனால்டோ ஸ்பான்சர் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் இடுகைக்கு 1,604,000 அமெரிக்க டாலர் (11.72 கோடி இந்திய ரூபாய்) வசூலிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் இருந்து அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு பிரபலங்களின் பட்டியலில் அடுத்து வரும் மெஸ்ஸி, இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுக்கு 1,169,000 அமெரிக்க டாலர் (8.54 கோடி இந்திய ரூபாய்) பெறுகிறார்.
கோலிக்கு முன்னால் பட்டியலில் உள்ள ஒரே விளையாட்டு வீரர் பிரேசிலிய கால்பந்து வீரர் நெய்மர் – ஒரு ஸ்பான்சர் பதிவிற்கு 824,000 அமெரிக்க டாலர் ( 6 கோடி இந்திய ரூபாய்) சம்பாதிக்கிறார்.