உலக சாதனையுடன் தொடரை வென்றது பங்களதேஷ் ..!

உலக சாதனையுடன் தொடரை வென்றது பங்களதேஷ் ..!

ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது ,2 வது போட்டியில் பங்களாதேஷ் எதிர்பாராதவிதமாக ஜிம்பாப்வேயிடமிருந்து அதிர்ச்சி வைத்தியத்தை சந்தித்தது.

நேற்று இடம்பெற்ற தொடரை  தீர்மானிக்கவில்லை மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருந்த்து, ஆனாலும் இறுதிநேர மூலமாக பங்களதேஷ் தன்னுடைய மானத்தை காப்பாற்றி தொடரை 2 க்கு 1 என கைப்பற்றியது .

முதலில் துடுப்பெடுத்தாடிய  ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது .

195 எனும் உலக்குடன் ஆடிய பங்களாதேஸ் அணிக்கு இறுதி 5 ஓவர்களில் ஓவருக்கு பத்துக்கும் அதிகமான ஓட்டங்கள் தேவைப்பட்டன, அந்த நிலையில் பங்களாதேஷ் அணி 4 பந்துகளில் மீதமிருக்க போட்டியில் அதிரடியாக 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2 க்கு 1 என கைப்பற்றியது.

நேற்று Ban மொத்தமாக ஒன்பது இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் விளையாடினார்கள், கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான இடதுகை துடுப்பாட்ட வீரர்களை பயன்படுத்திய உலக சாதனையையும் பங்களாதேஸ் நேற்று பெற்றுக்கொண்டது.

Previous articleலேடி ஸ்விம்மிங் சூப்பர் ஸ்டார் “Ledecky”
Next articleதோனியை ஞாபகப்படுத்திய இஷன் கிஷன், சமூக வலைதளங்களில் பகிரப்படும் பாராட்டுகள் ..!