உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி .
தென் ஆப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அண்மையில் நிறைவுக்கு வந்து மூன்று போட்டிகளை கொண்ட டுவென்டி டுவென்டி தொடரில் பாகிஸ்தான் அணி 2க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
இதன் மூலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி , கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை நிலைநாட்டியது.
twenty20 கிரிகெட் சரித்திரத்தில் ஒரு அணி நூறு வெற்றிகளை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாக பதியப்பட்டுள்ளது .
மொத்தமாக 163 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் 61 தோல்விகள் அடங்கலாக நூறு வெற்றிகளை ஈட்டியது.
இரண்டாவது இடத்தில் 137 போட்டிகளில் விளையாடிய இந்தியா 45 தோல்விகள் அடங்கலாக 88 வெற்றிகளை பெற்றுள்ளது .
தென் ஆபிரிக்கா 127 போட்டிகளில் விளையாடி 54 தோல்விகள் அடங்கலாக 72 வெற்றிகளை பெற்றுள்ளது .
ஆஸ்திரேலியா 131 போட்டிகளில் விளையாடி 59 தோல்விகள் அடங்கலாக 69 வெற்றிகளை பெற்றுள்ளது.
ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து காணப்படுகிறது, 137 போட்டிகளில் பங்கெடுத்து 67 தோல்விகள் அடங்கலாக 66 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 100 வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட முதல் சந்தர்ப்பம் பாகிஸ்தானால் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.