உலக சாம்பியன்களுக்கு எதிராக தொடரை வென்று அசத்தியது இலங்கை அணி..!
இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பங்களாதேஸ் இளையர் அணிக்கும் இலங்கை இளையோர் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் மீதமாக உள்ள நிலையில், இந்த போட்டியில் இலங்கை அணி 3-0 என தொடரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடப்பு உலக சாம்பியனான பங்களாதேஸ் அணிக்கு எதிராக இலங்கை அணியால் ஈட்டப்பட்டிருக்கும் இந்த வெற்றியானது அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கு மிகப் பெரும் உத்வேகத்தை கொடுக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
இலங்கை அணி சார்பில் செவேன் டானியல் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 184 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து போட்டியில் வெற்றி பெற்று தொடரை இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் 3-0 என வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.