உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி-இந்திய விக்கெட் காப்பாளர் யார் ?

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் விக்கெட் காப்பாளர் யார் எனும் கேள்வி நிலவுகின்றது.

இந்தியா சார்பில் பான்ட் மற்றும் விரித்திமான் சஹா ஆகியோருக்கிடையில் விக்கெட் காப்பாளராக யார் விளையாடுவார்கள் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் விக்கெட் காப்பாளராக பான்ட் விளையாடுவதே சிறந்தது என்று சக விக்கெட் காப்பாளரான சஹா கருத்து வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

சஹா சிறந்த விக்கெட் காப்பாளராக இருந்தாலும், துடுப்பாட்டத்தில் சொல்லுமளவில் பங்களிப்பு நல்குவதில்லை, ஆனால் பான்ட் கொஞ்சம் விக்கெட் காப்பில் சொதப்பினாலும் துடுப்பாட்டத்தில் மாட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார்.

ஆகவே பான்ட் விளையாடுவதுதான் சிறந்தது என்பதுதான் அணியின் நிலைப்பாடாக இருக்கும் என்பதும் முக்கியமானது.