எதிர்வரும் 18ஆம் திகதி இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் உற்று நோக்கப்படும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இடம்பெறவிருக்கிறது.
அக்சார் பட்டேல் , லோகேஷ் ராகுல் , ஷர்துல் தாகூர், மாயங் அகர்வால் ,வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் முன்னர் அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதன்முலம் ஆரம்ப வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் இடம்பெற்றுள்ளனர், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் தமது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் பூம்ரா, இஷாந்த் சர்மா, சாமி ஆகியோரோடு சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
மேலதிக விக்கெட் காப்பாளராக சஹா வும், மேலதிக துடுப்பாட்ட வீரராக ஹனுமா விஹாரியும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கான நியூசிலாந்து அணி இன்று காலை பெயரிடப்பட்டிருந்த நிலையில் ,சற்றுமுன்னர் இந்திய அணியின் இறுதி 15 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.