ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான போட்டி நடுவர்கள் விபரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.
அதன்படி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் கிறிஸ் கஃபனே மற்றும் இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் நடுவர்களாக செயல்பட உள்ளனர்.
இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்பரோ டிவி நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். கெட்டில்பரோ 2019-2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் டிவி நடுவராகவும் பணியாற்றினார்.
நான்காவது நடுவராக இலங்கையின் குமார் தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரிச்சி ரிச்சர்ட்சன் match referee யாக இருப்பார்.