உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் – இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பை நியூசிலாந்து அணி பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆஸி இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடப்பதாக இருந்தது.

கொரோனா காரணமாக அவுஸ்ரேலிய அணி  தென்னாப்பிரிக்கா செல்லவில்லை என்று அறிவித்துள்ளது . இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதால் நியூஸிலாந்து முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடருக்கு தகுதிபெற்றது. 

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் தொடரில் இந்தியா 2-1 என்று தொடரை வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SAvsAUS