உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் கொழும்பு கிளை ஆரம்பம்..!

சுவிற்சலாந்தை தலைமயமாக கொண்டு இயங்கி வரும் உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் கொழும்பு கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் கொழும்பு கிளை, உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நியமிக்கப்பட்டு 26.02.2023 அன்று கொழும்பில் முதலாவது உத்தியோகபூர்வ கூட்டத்தை நடாத்தியுள்ளது.

உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஸ்தாபக தலைவர் கந்தையா சிங்கம் இந்த கூட்டத்தினை மெய்நகர் தொழிநுட்பத்தினூடாக ஆரம்பித்து வைத்தார். கொழும்பு கிளையின் தலைவராக கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளராக ச.விமலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, பொருளாளராக M.சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். பட்மின்டன் போட்டிகளில் தேசிய ரீதி போட்டிகளில் பங்குபற்றி விளையாடி பல வெற்றிகளை பெற்றுவருகின்ற S.கோபிநாத் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொழும்பு கிளையின் நிர்வாக உறுப்பினர்களாக A.பிரபாகரன், S.செந்தூர், K. வாசகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கொழும்பு கிளை ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்டுத்தவுள்ளனர்.

கொழும்பில் பட்மின்டன் விளையாடும் தமிழ் பேசும் மக்களை இணைத்து அனைவரும் இணைந்து செயற்படும் முகமாகவும், போட்டிகள் மற்றும் பாடசாலை வீராங்கனைகளுக்கன போட்டிகளை ஏற்பாடு செய்தல், பயிற்சிகளை செயற்படுத்துதல், போன்றவை கொழும்பு கிளையினால் செயற்படுத்தப்படவுள்ளன.

பாடசாலையிலிருந்து விலகி விளையாடிக்கொண்டிருக்கும் வீர வீராங்கனைகளுக்கான போட்டிகளை ஏற்பாடு செய்தல், பயிற்சிகளை செய்தல் போன்ற விடயங்களையும் கொழும்பு கிளை முன்னெடுக்கவுள்ளது.

கொழும்பு கிளை மேலும் வேலைத்திட்டங்களையும் செய்யவுள்ளதாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் எட்டாவது உலக தமிழர் பூந்தாட்ட சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் சுவிற்சலாந்தில் நடைபெறவுள்ளன. எதிர்காலத்தில் இலங்கையில் இந்த தொடரை நடாத்தும் திட்டங்களும் உள்ளதாக அறியவருகின்றது.