எட்பெஸ்டன் டெஸ்ட்டில் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்…!

இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி எட்பஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போட்டியில் ஆதிக்கத்தை தக்கவைத்திருக்கும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, ரிஷப் பண்ட் 146 , ஜடேஜா 104, அணித்தலைவர் பும்ரா அதிரடியாக 31 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ்காக ஆடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 94 க்கு 5 விக்கெட்டுக்கள் என்று தடுமாறினாலும் பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்து அணியை மீட்டார். அவர் 106 ரன்னில் அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 36 , ஜோ ரூட் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்தியாவை 132 ரன்கள் முன்னிலையில் 2 ம் இன்னிங்ஸை ஆரம்பித்தது, தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 4 ரன்னில் அவுட்டானார். ஹனுமா விஹாரி 11 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் புஜாரா நிதானமாக ஆட அவருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 50 ரன்கள் சேர்த்துள்ளது.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 50 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 3 ம் நாள் நிறைவு வரை இந்தியா 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.