இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நிறைவுக்கு வந்தது.
இந்த போட்டியில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2_0 என வெற்றி கொண்டது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு முதல் மூன்று வீரர்களும ரோகித் சர்மா, பான்ட், மற்றும் கோலி ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்தியா தடுமாற்றத்தை சந்தித்தது.
சூரியகுமார் ஜாதவ் பெறுமதியான அரைசதம் அடிக்க, லோகேஷ் ராகுல் 49 ஓட்டங்களை சேர்த்துக் கொடுக்க இந்தியா போராடி 237 ஓட்டங்களை 9 விக்கெட்டுகளை இழந்து பெற்றது.
மேற்கு இந்திய பந்து வீச்சு, களத்தடுப்பு பிரமாதமாக இருந்தது. 238 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதலே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பிரஷீத் கிருஷ்ணா மிக அற்புதமாகவும் நேர்த்தியாகவும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பந்துவீசி, எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார். அனைத்து பந்துவீச்சாளர்கள் உடைய பங்களிப்பின் மூலமாக இந்த போட்டியில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ரோகித் சர்மாவின் தலைமைத்துவ மதிநுட்பமும், பந்துவீச்சாளர்களை பயன் படுத்திய விதமும், ஒரு குறைந்த ஓட்ட எண்ணிக்கையை வைத்துக் கொண்டு போட்டியில் 44 ஓட்டங்களால் வென்று தொடரை கைப்பற்றியமையும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.
ஒரு போட்டி மீதமுள்ள நிலையிலேயே இந்தியா 2_0 என தொடரை வென்றுள்ளது .
ரோகித் சர்மா தொடர்ச்சியான 8 போட்டிகளில் வெற்றியை இந்தியாவிற்காக பெற்றுக்கொடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது.