1999 ம் ஆண்டு ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய நடுவர் ரோஸ் எமர்சன் முரளியின் பந்துவீச்சு நடவடிக்கையில் உறுதியாக இருக்கவில்லை, மேலும் அவரது பந்து வீச்சில் No Ball என்று அழைக்கத் தொடங்கினார்.
இதனால் ஆட்டம் 12 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது, இலங்கை கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா முழு அணியுடன் சேர்ந்து களத்தில் இருந்து வெளியேறுவதாக மிரட்டினார்.
இந்த தருணத்தில், அர்ஜுனனுக்கும் நடுவர் ரோஸ் எமர்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, மேலும் சில கடும்சொற்களை அர்ஜுனா பகிர்ந்து கொண்டார்.
பின்னர் அதை ஐ.சி.சி விசாரிக்க வேண்டியிருந்தது. விசாரணையில் சனத் ஜெயசூர்யா சாட்சியாக அழைக்கப்பட்டார்,
ஆனால் வாதத்தில் கூறப்பட்டதை விளக்க மறுத்து, அர்ஜுனாவை புத்திசாலித்தனமாக சனத் காப்பாற்றினார்,
ஐசிசி யின் விசாரணையில் ‘எனக்கு ஆங்கிலம் எதுவும் புரியவில்லை, என்னால் ஆங்கிலம் பேசவோ புரிந்துகொள்ளவோ முடியாது’ என்று பதிலளித்தார்.
இதன் மூலமாக சனத் மட்டுமல்லாது ரணதுங்கவும் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை சனத் அண்மையில் வானொலி நேர்காணலில் நினைவிபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.