என்னுடைய கிரிக்கெட் வாழ்கையில் என் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்த இரண்டு போட்டிகள் இவைதான் – விராட் கோலி வருத்தம்

என்னுடைய கிரிக்கெட் வாழ்கையில் என் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்த இரண்டு போட்டிகள் இவைதான் – விராட் கோலி வருத்தம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தற்பொழுது தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் நடந்த ஒரு சில விஷயங்களை குறித்து பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் இரண்டு போட்டிகளை சுட்டிக்காட்டி அந்த இரண்டு போட்டிகளின் முடிவு தன்னை வருத்தமடையச் செய்ததென்றும், தனது இதயத்தை அந்த இரண்டு போட்டிகள் சுக்குநூறாக உடைத்தது என்றும் கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை அந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் உட்பட 973 ரன்கள் விராட் கோலி குவித்தார். தற்பொழுது வரை ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மிக சிறப்பாக தன் அணியை வழிநடத்தி இறுதி போட்டி வரை விராட் கோலி அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் பெங்களூர் அணி கட்டாயமாக வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்த வேளையில், 8 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது.

இரண்டு போட்டிகளில் மற்றொரு போட்டியாக அதே ஆண்டு (2016ஆம் ஆண்டு) நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த உலக கோப்பை டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 3 அரை சதங்களுடன் மொத்தமாக 273 ரன்கள் குவித்தார். அந்த உலக கோப்பை தொடரில் தமிம் இக்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராக விராட் கோலி இருந்தார்.

இந்தியாவில் நடந்த அந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டி வரை முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக இழந்தது.

விராட் கோலி கூறிய இந்த இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி அரை சதம் அடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த இரண்டு தொடர்களிலும் விராட் கோலி அதிகபட்ச ரன்கள் குவித்த போதிலும், தொடரின் முடிவு தோல்வியாக அமைந்தது. விராட் கோலிக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இந்த இரண்டு தொடரில் விராட் கோலி குறிப்பிட்டுக் கூறிய இந்த இரண்டு போட்டிகளும் மிகுந்த மன வலியை கொடுத்தது நிதர்சன உண்மை.

#Abdh