இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமல் இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறப்பு கடிதம் அனுப்பியுள்ளதாக இன்று செய்தி வெளியானது. தினேஷ் சந்திமல் தேர்வு முறை குறித்து பல பிரச்சினைகளை எழுப்பியதோடு, அவரை அணிக்கு தேர்ந்தெடுப்பதில் தேர்வுக் குழு பின்பற்றிய நடைமுறைகளையும் அவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு சந்திமல் அனுப்பிய கடிதம் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்தா டி சில்வாவின் பெயரில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் அவ்வப்போது அணியில் சேர்க்கப்படுவதிலிருந்து சில அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவ்வப்போது நீக்கப்பட்டார், ஒரு நேர்த்தியான வீரராக அவர் திறமையாளனாக திரும்புவதற்கான செயல்முறையையும் பாதித்துள்ளது. இதை அவர் அரவிந்த டி சில்வாவுக்கு பின்வருமாறு விளக்கியுள்ளார்.
குறிப்பாக, ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரராக, ஒரு வீரருக்கு தொடர்ந்து ஒரு வாய்ப்பை வழங்காததையும், தேர்வுக் குழு அவரை நம்ப மறுப்பதும் அந்த வீரரின் செயல்திறனை பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் வட்டாரங்களின் தகவல்படி, தினேஷ் சந்திமல் தனது காலத்தில் அவர் காட்டிய திறமைகளை அந்தக் கடித்த்தில் தரவுகளுடன் காட்டியுள்ளார். குமார் சங்கக்கார, மகேலா ஜெயவர்தன, டி.எம். டில்ஷான் மற்றும் சனத் ஜெயசூரிய, இலங்கை இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த வீரர்களில் சிலர், அவர்களின் கிரிக்கட் வாழ்க்கையின் கடைசி நாட்களில் மிகவும் திறமையானவர்களாக மிளிர்ந்தனர் என்று சந்திமால் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனது இறுதி விளக்கம் என்னவென்றால், எனக்கு 31 வயது என்பது திறமையை பாதிக்கும் விஷயம் அல்ல. ஆண்டின் இந்த நேரத்தில் நான் சிறந்து விளங்கும் திறனைக் கொண்டுள்ளேன் என்பதை திடமாக நம்புகின்றேன்.
எனது ஆட்டத்திறனுக்கு அப்பால், உடற்தகுதியைப் பேணுவதற்கும், கிரிக்கெட்டுடன் உயர் மட்ட நெறிமுறை மற்றும் ஒழுக்கமான உறவைப் பேணுவதற்கும் நான் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளேன்.
நான் ஒரு சிறந்த வீரராக நிரூபிக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நான் அதைக் காப்பாற்றியுள்ளேன் என தனது கருத்துக்களை இந்த முறையில் கிரிக்கெட்டுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
தனது விளையாட்டு வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து விவாதிக்க கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்தா டி சில்வா மற்றும் தேர்வுக் குழுவுடன் கலந்துரையாடவும் சந்திமல் சந்தர்ப்பம் கோரியுள்ளார்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்த விடயத்தை கிரிக்கெட் சபையுடன் விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். கிரிக்கெட் எனது தொழில். எனவே இந்த கட்டத்தில் எதிர்காலத்தைப் பற்றி தெளிவான முடிவை எடுக்க விரும்புகிறேன் எனவும் சந்திமால் கோரிக்கை விடுத்துள்ளார்.