எல்லா சாதனைகளிலும் கைவைத்து இறுதியாய் 71 ஆண்டுகால பிரட்மன் சாதனையையும் முறியடிக்க பார்க்கும் ஜோ ரூட் –இந்தியாவுடனான போட்டியில் விரைவில் சம்பவம் நிகழலாம்..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் மூன்று போட்டிகள் நிறைவுக்குவந்த நிலையில் இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் அடங்கலாக இதுவரை 500க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்து ஏராளமான சாதனைகளை படைக்க தயாராகிவிட்டார்.
இந்த நிலையில் கிரிக்கெட்டின் பிதாமகன் டொன் பிரட்மென் சாதனையையும் ரூட் முறியடிப்பார் என நம்பப்படுகிறது.
ஒரு ஆண்டில், ஒரு குறித்த ஒரு வீரர், குறித்த ஒரு அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை பிரட்மன் 71 ஆண்டுகளாக வைத்திருக்கிறார். பிரட்மன் இங்கிலாந்து அணிக்கைதிராக 1730 ம் ஆண்டில் 9 இன்னிங்ஸ்களில் 974 ஓட்டங்களை ஒரே ஆண்டிலேயே விளாசித் தள்ளினார்.
இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஜோ ரூட் 13 இன்னிங்ஸ்களில் மொத்தம் 875 ஓட்டங்களை பெற்றுள்ளார், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் இருக்கும் நிலையில் 100 ஓட்டங்களை பெற்றுக் கொள்வாராக இருந்தால், 71 ஆண்டு கால சாதனையை முறியடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
ஒரு ஆண்டில் அதிகமான டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற மொகம்மட் யூசுப்பின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 390 ஓட்டங்கள் தேவையான நிலையில் இந்த ஆண்டில் சாதனை புத்தகங்கள் எல்லாவற்றிலும் தன் பெயரை பதித்து விடுவார் என்றே எதிர்பார்கப்படுகிறது.