எல் பி எல் போட்டிகளில் நேர மாற்றம் ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு …!
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடரின் குழுநிலை ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ளன, ஞாயிற்றுக்கிழமை நாளை Play off சுற்று ஆட்டங்கள் அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்திலேயே ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையில் இந்த போட்டிகளுக்கான நேர அட்டவணையில் மாற்றங்களை செய்து ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது .
3 மணிக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட எலிமினேட்டர் போட்டி 4 மணி அளவில் போட்டி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் முதலாவது குவாலிபயர் ஆட்டம் 8 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது, முதலாவது எலிமினேட்டர் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தம்புள்ள ஜயன்ட்ஸ ஆகிய அணிகளும் முதலாவது குவாலிபயர் ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கிளடியேட்டர்ஸ் ஆகிய அணிகளும் விளையாடஉள்ளமை குறிப்பிடத்தக்கது.
திட்டமிடப்பட்டிருந்த நேர அட்டவணையை விடவும் ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பமாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.