ஏன் ஐபில் போட்டிகளில் மும்பை, சிஎஸ்கே இரு அணிகளும் சக்ஸஸ்ஃபுல்லாக இருக்கிறது?

அணியை மாற்றாமல், முதல் போட்டியிலேயே, தங்களுடைய பிளேயிங் 11 என்ன என்பதை அறிந்து, அதே அணியைத் தொடர்ந்து பேக்கப் செய்வது, அவர்களில் யாரவது சில வீரர்கள் சொதப்பினால்கூட, உடனே அவரை பெஞ்சில் உட்கார வைக்காமல், அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து, அவர்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்தி, அவர்களுடைய நேச்சுரல் கேமை வெளியே கொண்டு வந்து, வெற்றியை அறுவடை செய்வார்கள். அதனால்தான் இரு அணிகளும், பல கோப்பைகளையும், ஃபைனல்களையும் பார்த்து இருக்கிறார்கள்.
மற்ற அணிகள் எல்லாம் ஹோல்சேல் மாற்றங்கள் செய்து கொண்டிருக்க, வெற்றியோ தோல்வியோ அணியை பெரியதாக மாற்றாமல், அதே அணியைக் கொண்டு, மற்ற அணிகளை வீழ்த்துவதுதான், சாம்பியன் அணிகளின் வழக்கம்.
அதை இந்த சீசனிலும், சிறப்பாகச் செய்யத் தொடங்கி இருக்கிறது சிஎஸ்கே. முதல் 3 போட்டிகளிலும் பெரியதாக ரன் வராமலும், அவருடைய ஷாட்களை ஆடமுடியாமலும், கஷ்டப்பட்ட ருத்ராஜை, வெளியே தூக்காமல், பேக்கப் செய்ததன் விளைவை, இன்று சிஎஸ்கே அனுபவித்திருக்கிறது.
போன சீசனில், ஸ்பார்க்கைக் காட்டிய ருத்ராஜின் மீது நம்பிக்கை வைத்து, ஃபார்ம் பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து வாய்ப்பளித்ததன் காரணமாக, இன்று ஒரு அட்டகாசமான ஆட்டத்தை ஆடிச் சென்றுள்ளார் ருத்ராஜ்.
சிஎஸ்கே, நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த பவர்பிளே ரன்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், பழைய பன்னீர்செல்வமாக, ஐபிஎல் களத்திற்கு மீண்டும் வந்து கொண்டிருக்கிறார்கள்.