ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தான் A அணி இலங்கை வருகிறது..!

ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தான் A அணி இலங்கை வருகிறது..!

நான்கு நாள் போட்டி மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்காக ஆப்கானிஸ்தான் A அணி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வரும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 28 முதல் மே 14 வரை போட்டிகள் நடைபெறும்.

ஆப்கானிஸ்தான் A அணி ஏப்ரல் 25 ஆம் தேதி இலங்கை வரும் மற்றும் ஏப்ரல் 28 ஆம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. மே 11 முதல் 14 வரை நான்கு நாட்கள் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஏப்ரல் 28, 2024 – முதல் ஒருநாள் போட்டி
ஏப்ரல் 30, 2024 – இரண்டாவது ஒருநாள் போட்டி
மே 3, 2024 – மூன்றாவது ஒருநாள் போட்டி
மே 5, 2024 – நான்காவது ஒருநாள் போட்டி
மே 7, 2024 – ஐந்தாவது ஒருநாள் போட்டி
11 – 14 மே, 2024 – நான்கு நாள் ஆட்டம்