11 கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் எல்பிஎல் 2 இல் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறார்கள் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.ஐ
ஐ.சி.சி தரவரிசைப்படி உலகின் முதல் தரவரிசை ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசன், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்கள் பென் கட்டிங் மற்றும் ஜேம்ஸ் பால்க்னர், தென்னாப்பிரிக்க தேசிய அணியின் ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவர் வவுமா ஆகியோர் லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாம் பதிப்பிற்கு தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
மிட்செல் மெக்லெனகன், நிக்கோலஸ் பூரன், முகமது மஹ்மதுல்லா, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ரவி ராம்பால், டேவிட் வைஸ் மற்றும் கலாம் பெர்குசன் ஆகியோர் பிளேயர்ஸ் டிராஃப்ட்டுக்கு முன்னால் தங்களைத் தாங்களே பதிவு செய்தவர்கள்.
ஜிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர், நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லாமிச்சேன், அமெரிக்காவின் அலி கான் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இத்தோடு கண்டி டஸ்கர்ஸ் ஆல்ரவுண்டர் இர்பான் பதானின் சகோதரரான இந்தியாவின் யூசுப் பதானும் தேர்வுக்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.
எல்பிஎல் -2 க்கு பதிவு செய்த வேறு சில சர்வதேச வீரர்கள்:
பங்களாதேஷ்:
தமீம் இக்பால், மெஹதி ஹசன் மிராஸ், டாஸ்கின் அகமது, லிட்டன் தாஸ் & சௌமியா சர்க்கார்
ஆஸ்திரேலியா:
உஸ்மான் கவாஜா, பென் டங்க் & காலம் பெர்குசன்
மேற்கிந்திய தீவுகள்:
ஷெல்டன் கோட்ரெல், ராயத் எம்ரிட், ரவி ராம்பால், டுவைன் ஸ்மித், தினேஷ் ராம்டின், ஜான்சன் சார்லஸ் & ரோமன் பவல்
பாகிஸ்தான்:
ஹரிஸ் சோஹைல், வகாஸ் மக்சூத், முகமது ஹஸ்னைன், முகமது இர்பான், ஷோயிப் மக்ஸூத், ஷான் மசூத், அன்வர் அலி & அம்மத் பட்
தென்னாப்பிரிக்கா:
ரிலே ரோசோவ், டேவிட் வைஸ், ஜான் ஜான் ட்ரெவர் ஸ்மட்ஸ், மோர்ன் மோர்கல், ராஸி வான் டெர் டுசென், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி & ஹார்டஸ் வில்ஜோன்
ஆப்கானிஸ்தான்:
அஸ்கர் ஆப்கான், முகமது ஷாஜாத், நஜிபுல்லா சத்ரான், நவீன் உல் ஹக், உஸ்மான் ஷின்வாரி, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஸசாய், நவீன் உல் ஹக் & கைஸ் அஹ்மத்