ஐசிசியின் புதிய டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்..!
சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இதனுடைய முதல் தொடராக இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் பாகிஸ்தான் மற்றும் மேற்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றன .
இதிலே பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடர் நிறைவுக்கு வந்தது, ஆனால் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரில் மீதம் இன்னும் ஒரு போட்டி இருக்கிறது.
இந்த நிலையில் இன்று ஓவல் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் புள்ளி பட்டியலில் இந்திய அணி 26 ஆறு புள்ளிகளை பெற்று மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இங்கிலாந்து அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்று 4 ம் இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.