ஐசிசியின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இலங்கை பேட்ஸ்மேன் பாத்தும் நிசாங்க எந்த எல்பிஎல் அணியிலும் இல்லை!

ஐசிசியின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இலங்கை பேட்ஸ்மேன் பாத்தும் நிசாங்க எந்த எல்பிஎல் அணியிலும் இல்லை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் திருவிழா என அழைக்கப்படும் லங்கா பிரீமியர் லீக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருவதுடன், வீரர்கள் ஏலமும் இன்று மாலை ஆரம்பமானது.

எவ்வாறாயினும் இன்றைய வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அணிகள் தமது வீரர்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருந்ததால் ஒரு அணிக்கு 6 உள்ளூர் வீரர்களையும் 3 வெளிநாட்டு வீரர்களையும் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

உலகம் முழுவதிலுமிருந்து பெயர் பெற்ற பல வீரர்கள் இந்த வீரர்கள் ஏலத்தில் விற்கப்பட்டனர். எனினும் ஐ.சி.சி டுவென்டி 20 தரவரிசையில் இலங்கையின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பதும் நிஸ்ஸங்கவை கொள்வனவு செய்ய எந்தவொரு அணியும் முயற்சிக்காதது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்ற பதும் நிஸ்ஸங்க இவ்வாறு நிராகரிக்கப்பட்டமை ரசிகர்களுக்கு கவலையை தோற்றுவித்துள்ளது.