ஐசிசியின் புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியில்- இந்திய ,பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி..!
சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நடத்தப்படும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதிய புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கும் இந்திய அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றது.
நேற்று பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலமாக பாகிஸ்தான் அணியும் 12 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் காணப்பட, அதே 12 புள்ளிகளை பெற்ற மேற்கிந்திய தீவுகள் மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் புதிய ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் கடுமையான போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.