ஐசிசி ஆடவர் டி20 அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுகு இடமில்லை

ஐசிசி ஆடவர் டி20 அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுகு இடமில்லை

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 அணியின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், 11 பேர் கொண்ட ஆடவர் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் வீர‌ர் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அந்த அணியில் இருந்து பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகீன் அஃப்ரிடி ஆகிய 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் ரிஸ்வான் 1326 ரன்களும், பாபர் அசாம் 939 ரன்களும் சேர்த்துள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஐசிசி அணியின் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீர‌ர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.

ஐசிசி ஆடவர் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஜோஸ் பட்லர், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்சி, ஜோஷ் ஹேசில்வுட், வனிது ஹசரங்கா, முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஷாஹின் அஃப்ரிடி

#Abdh

Previous articleLegends Leaque 2022: பதான் சகோதரர்கள் அதிரடியில் இந்தியா மஹாராஜாஸ் அபார வெற்றி..!
Next articleதென் ஆபிரிக்க இளையோர் அணியில் பிளசிஸ் , டீ வில்லியேர்ஸ்…!