இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தினேஷ் கார்த்திக்கும் தன்னுடைய பங்களிப்பை நல்க காத்திருக்கின்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் இதுவரைக்கும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாவிட்டாலும்கூட, 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பின்னர் இந்திய தேர்வாளர்கள் தினேஷ் கார்த்திக்கிற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்க, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் வீரராக அவதாரம் எடுக்காமல், வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கிறார்.
கொரோனா அச்ச நிலைமை காரணமாக அங்கு பின்பற்றப்படுகின்ற கெடுபிடிகள் காரணமாக வர்ணனையாளர்கள் பலர் போட்டிக்கு செல்வதற்கு தயக்கம் காட்டும் நிலையில் இந்தியாவில் இருந்து சுனில் கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வர்ணனையாளராக இந்தப் போட்டிகளில் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
குறித்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் இடம்பெறவுள்ள இங்கிலாந்துடனான டெஸ்டில் விக்கட் காப்பாளர் தேவை ஏற்பட்டால் அதனை ஈடுகட்டும் வாய்ப்பக்கள் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.