சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வருகின்ற 18ஆம் திகதி சவுத்தம்ரன் மைதானத்தில் இடம்பெறவிருக்கிறது.
இந்தப் போட்டி இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு புதுவிதமான ஆலோசனையை முன்வைத்திருக்கிறார், இரண்டரை ஆண்டுகளாக விளையாடப்பட்டு வரும் ஒரு தொடரை ஒரு போட்டியை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றியாளரை தீர்மானிக்க கூடாது எனும் கருத்தை சாஸ்திரி முன்வைத்திருக்கிறார்.
இந்த போட்டி மூன்று போட்டிகள் கொண்டதான ஒரு இறுதிப் போட்டியாக அமைந்தால், அதுவே ஆரோக்கியமானது என்னும் கருத்தையும் சாஸ்திரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அதிகமான ரசிகர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கும் நிலையில் ஒற்றை இறுதிப் போட்டியை வைத்துக் கொண்டு இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கூடாது எனவும், நீண்டகால அடிப்படையில் இந்த தொடரை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை விரும்பினால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையே ஒழுங்கமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சாஸ்திரி வெளியிட்டிருக்கிறார்.
18ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இறுதிப் போட்டிக்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.