ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது அத்தியாயத்தில் அதிக ஓட்டம் பெற்றவர்கள் விபரம் ..!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இடம்பெற்று வருகிறது.
இந்திய, இங்கிலாந்து தொடர் மற்றும் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் தொடரை அடுத்து அதிகமான ஓட்டங்களில் பெற்றவர்கள் விபரம் வெளியாகி இருக்கிறது.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்த ஓட்ட எண்ணிக்கை விபரம் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் அதிகமான ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் ஜோ ரூட் முதலிடத்தில் இருக்கிறார் .
பாகிஸ்தான் ஆட்டக்காரர் பாபர் அசாம் , அலாம் இந்த பட்டியலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது, அதேபோன்று ரோகித் சர்மா, ராகுல் ஆகியோரும் முதல் ஐந்து பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இருக்கின்றனர் .
இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றோர் விபரம்.
?ரூட்- 386 ஓட்டங்கள்
?ராகுல் -244 ஓட்டங்கள்
?பாபர் அசாம் -193 ஓட்டங்கள்
?பாவாட் அலாம் -180 ஓட்டங்கள்
?ரோஹித் சர்மா -152 ஓட்டங்கள்