சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நடத்தப்படுகின்ற ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் விளையாடும் வீரர்களுள், கோலி தனது பங்களிப்பை பெருமளவில் துடுப்பாட்டத்தின் மூலம் வழங்குவதில்லை எனும் குற்றச்சாட்டு இருக்கிறது.
முக்கியமான தொடரின் இறுதிப்போட்டியில் கோலி ஏமாற்றி விடுகிறார் என்பதே ரசிகர்களின் ஒட்டுமொத்தமான குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது.
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கோலி 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், இதன் மூலமாக புதிய ஒரு இந்திய சாதனையை படைத்திருக்கிறார் விராட் கோலி.
ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் கோலி ஐந்தாவது இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். மொத்தமாக கோலி துடுப்பாட்டத்தில் 204 ஓட்டங்களை குவித்துள்ளதன் மூலமாக இந்திய சாதனைக்கு சொந்தகார்ராகியுள் ளார்.
இதுவரை இந்த சாதனை காம்பீர் வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.