ஐசிசி 2021ஆம் ஆண்டின் சிறந்த டி20ஐ வீரர் பட்டத்திற்கு தேர்வாகியுள்ள 4 வீரர்கள்
இந்த ஆண்டு டி20ஐ கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு ஐசிசி தரப்பில், 2021ஆம் ஆண்டின் சிறந்த டி20ஐ வீரர் என்கிற பட்டம் வழங்கப்பட இருக்கின்றது. தற்பொழுது அந்த படத்திற்கு 4 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது ரிஸ்வான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோஸ் பட்லர், இலங்கையைச் சேர்ந்த வணிண்டு ஹசரங்கா மற்றும் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மிட்செல் மார்ஷ் ஆகியோர் தற்போது இந்த பட்டத்திற்கு போட்டி போடுகின்றனர்.
ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து அணியில் குறிப்பாக டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மென் ஜோஸ் பட்லர். இந்த ஆண்டு அவர் மொத்தமாக 589 ரன்கள் குவித்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 65.44 ஆக இருந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இவர் 269 ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை டி20 தொடரில் இவரது பேட்டிங் ஆவெரேஜ் 89.67 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 151.12 என்பது குறிப்பிடத்தக்கது.
வனிண்டு ஹசரங்கா
இலங்கை அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர் வீரராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இந்த வனிண்டு ஹசரங்கா. இந்த ஆண்டு இவர் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சு மூலமாக 36 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இந்த ஆண்டு டி20ஐ போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளரும் இவர் தான். இந்த ஆண்டு இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 11.63 மற்றும் எக்கானமி விகிதம் 5.44 என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஹம்மது ரிஸ்வான்
பாகிஸ்தான் அணிக்காக இந்த ஆண்டு இவர் மொத்தமாக 1326 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 73.66 ஆக இருந்துள்ளது. குறிப்பாக நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இவர் 281 ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை டி20 தொடரில் இவரது பேட்டிங் ஆவெரேஜ் எழுபதுக்கு மேல் (70.25) இருந்துள்ளது தனிச் சிறப்பாகும். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை முன்னேறியதற்கு இவரது சிறப்பான பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிட்செல் மார்ஷ்
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்கள் அவ்வளவு எளிதில் இவரை மறந்து விட மாட்டார்கள். நியூசிலாந்து அணிக்கு எதிராக 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இறுதிவரை அவுட்டாகாமல், ஆஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.அதுமட்டுமின்றி இந்த ஆண்டு அவர் மொத்தமாக 627 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த ஆண்டு இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 35 என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்டுள்ள 4 வீரர்களும் மிகச் சிறப்பாக இந்த ஆண்டு டி20ஐ போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். கூடிய விரைவில் இவர்களிலிருந்து ஏதேனும் ஒரு வீரருக்கு ஐசிசியின் இந்த ஆண்டிற்கான சிறந்த டி20ஐ வீரர் பட்டம் கிடைக்க போகிறது. அந்தப் பட்டம் எந்த வீரருக்கு கிடைக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
#Abdh