ஐந்தே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த இந்திய _பாகிஸ்தான் போட்டி டிக்கெட்டுகள் …!
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள ஐசிசி டுவென்டி20 உலக கிண்ணப் போட்டிகள் தொடர்பில் ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது .
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரு நாட்டு தொடர்கள் எதுவும் இடம் பெறாத காரணத்தால், ஐசிசி தொடர்களில் இரு நாடுகளும் பங்கேற்கும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து விடும்.
இறுதியாக கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐசிசி t20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போதும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் உலகக்கிண்ணத்தில் மோதவுள்ளன.
நேற்றைய நாளில் டிக்கெட் விற்பனை ஆரம்பமாகி ஐந்து நிமிடங்களிலேயே இரு அணிகளுக்கும் இடையிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதேபோன்று இந்தியா இரண்டாவது போட்டி எந்த அணியுடன் விளையாடப்படும் என்பது இதுவரைக்கும் தெரியாவிட்டாலும்கூட அதற்கான டிக்கெட்டுகளும் வெறும் ஐந்து நிமிடத்தில் விற்று தீர்ந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022
முதல் சுற்று
குழு A: இலங்கை, நமீபியா, இரண்டு தகுதிச் சுற்று
குழு B: வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இரண்டு தகுதிச் சுற்று
சூப்பர் 12 நிலை
குழு 1: ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, A1, B2
குழு 2: பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, B1, A2
அரை இறுதி
நவம்பர் 9: SCG, 7pm AEDT
நவம்பர் 10: அடிலெய்டு ஓவல், இரவு 7 மணி AEDT
இறுதி
நவம்பர் 13: MCG, இரவு 7 மணி AEDT